மைசூருவின் புகழ்பெற்ற தேவாலயத்தில் உள்ள பாதிரியார் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேவாலய வேலைகளுக்காகத் தன்னை அவ்வப்போது பாதிரியார் அவர் அறைக்கு அழைப்பதாகவும் அங்கு வைத்து தன்னை தவறாக நடத்துவதாகவும் அப்பெண் குற்றஞ்சாட்டுகிறார்.
இந்து மதத்தைச் சேர்ந்த இந்த பாதிக்கப்பட்ட பெண், காதல் திருமணத்தின்போது கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார். அதிலிருந்து தேவாலயப் பணிகளில் தன்னை இணைத்து பல வேலைகளைச் செய்துவந்துள்ளார். ஆனால், நாளுக்கு நாள் நிலைமை தலை கீழாக மாற ஆரம்பித்துள்ளது.
குடுக்கு-க்கு குத்தாட்டம் போட்ட பாதிரியார்... வைரல் காணொலி!
தேவாலய செயல்பாடுகள் அறிய, தலைமை பாதிரியார் அப்பெண்ணை அவ்வப்போது இரவில் தன் அறைக்கு அழைத்து தேவாலயப் பணிகள் குறித்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பெண்ணிடம் தவறான பேச்சு வழக்கிலும், பாலியல் ரீதியிலான தூண்டலிலும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இது அதிகம் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து தேவாலய நிர்வாக அலுவலர் ராபர்ட் தானாக முன்வந்து பாதிரியார் மீது வழக்குத் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் வில்லியம் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
தேவாலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து!
அதில், “தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் போலியானவை. என் மீது அவப்பெயர் வர வேண்டும் என்பதற்காகவே அப்பெண் அந்தக் காணொலி பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதை வைத்து ஒரு படத் தயாரிப்பாளரை அணுகியிருந்தால்கூட நல்ல பலன் கிடைத்திருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.