குடியுரிமை திருத்தச் சட்டத்தின் 14, 21, 25 ஆகிய பிரிவுகள் நாட்டின் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும், இந்த திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தினை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய வழக்கறிஞர்கள் கழகத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து, 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், பார்சிகள் ஆகியோர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகுக்கிறது.
டெல்லிக்கு ஆதரவாகக் களமிறங்கிய சென்னை...!
இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் டிசம்பர் 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இக்குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு மாநிலங்களவையில் 125 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், 105 உறுப்பினர்கள் இதனை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ' இது இந்தியத் திருநாட்டின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்' என்று குறிப்பிட்டிருந்தார். அதுவே காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, 'இது பிரிவினைவாத சக்திகளின் வெற்றி' என்று கூறியிருக்கிறார்.
தற்போது இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்து பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தினை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய வழக்கறிஞர்கள் கழகத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்