மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நவ சேவா துறைமுகத்திற்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து சனிக்கிழமை (ஆக.8) கப்பல் ஒன்று வந்தது.
இந்தக் கப்பலில் அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது கப்பலுக்குள் ஆயுர்வேத மருந்துகள் என்ற போர்வையில் மூங்கில் குச்சிக்குள் வைத்து 191 கிலோ ஹைராயின் போதைப் பொருள்கள் கடத்திவந்திருப்பது தெரியவந்தது.
இதன் சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும். இதையடுத்து அலுவலர்கள் அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தார்கள். மேலும், இது குறித்து சுங்க மற்றும் துறைமுக அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தப் போதைப் பொருளை மும்பை வழியாக டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஹெராயின் அலுவலர்கள் வசம் சிக்கியுள்ளது. உலக நாடுகளுக்கு சட்டவிரோதமாக அபின் ஏற்றுமதி செய்யும் நாடான ஆப்கானிஸ்தான் விளங்குகிறது.
இங்கிருந்துதான் ஐரோப்பிய நாடுகளுக்கு 90 விழுக்காடு அபின் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டார்க் வெப்: கொடிகட்டி பறக்கும் போதைப் பொருள் விற்பனை!