இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மக்களிடையே அச்சம் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸை சீனர்கள்தான் இந்தியாவிற்குள் பரப்புவதாகவும் சிலர் தவறாகக் கருதுகின்றனர். இதனால் சீனர்கள் போல் தோற்றமுள்ள வடகிழக்கு மக்கள் மீதான வன்முறை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மும்பையின் கலினா என்ற பகுதியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மீது அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் எச்சில் துப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக முகமது அமீர் முகமது எலியாஸ் என்பவரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து தேசிய மகளிர் ஆணையம் நடத்திய விசாரணைக்குப் பின் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகளிர் ஆணையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 பரவலுக்கு மத்தியில் மற்றொரு இன பாகுபாடு. மும்பையின் கலினா சந்தையில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மீது மற்றொருவர் எச்சில் துப்பியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் விசாரணை செய்துவருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், "எனது சகோதரியுடன் மளிகை பொருள்களை வாங்க கலினா சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பைக்கில் வந்த எலியாஸ் (குற்றஞ்சாட்டப்பட்டவர்) எனது முகமூடியை பிடுங்கி என் மீது துப்பினார்" என்றார்.
இதையும் படிங்க: குமாரசாமி வீட்டு திருமணத்தில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை!