மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள சிட்டி சென்டர் மால் அடித்தளத்தின் மூன்றாவது அடுக்கில் கடந்த வியாழக்கிழமை (அக். 22) இரவு 8 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, தீயை அணைக்க 18 தீயணைப்பு இயந்திரங்கள், 10 ஜம்போ டேங்கர்கள் ஈடுபட்டுள்ளன என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், சுமார் 36 மணி நேரமாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறிவருகின்றனர். இருந்தபோதிலும் தீ கட்டுக்குள் வந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு படை அலுவலர் ஒருவர் கூறுகையில், “இந்த தீ விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், தீயணைப்பு நடவடிக்கையின்போது, துணை தீயணைப்பு அலுவலர் உள்பட ஐந்து தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க...குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!