உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கியிருக்கிறது. மும்பை நகரம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் அதிகப்படியாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை நகரத்தில் முக்கிய மருத்துவமனைகளில் புதிய சேர்க்கைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளது. டாடா மருத்துவமனையில் சராசரியாக 3,500 நோயாளிகள் ஒரு நாளைக்கு பரிசோதிக்கப்பட்டனர், ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்தப் பின்பு, இந்த எண்ணிக்கை 1,700 ஆகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில் அறுவை சிகிச்சை பிரிவும் 50 விழுக்காடு வீழ்ச்சியைக் சந்தித்துள்ளது. மும்பையில் மிக முக்கிய மருத்துவமனையாக கருதப்படுவது டாடா புற்றுநோய் மருத்துவமனையாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு மக்கள், சிகிச்சைக்காக வருகின்றனர். ஊரடங்கில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்த மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் வேறு வழியின்றி மும்பையிலேயே முடங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பால் சிக்கித் தவிப்பவர்களுக்கு விசா நீட்டிப்பு