மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த செம்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 56 வயதான கோவிட்19 வைரஸ் தாக்குதல் நோயாளி தங்கி சிகிச்சைப் பெற்றார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட்19 (கரோனா வைரஸ்) தொற்று இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில், மும்பையின் தாராவியைச் சேர்ந்த 56 வயதான ஒருவர் கோவிட்19 வைரஸ் தாக்குதலினால் மருத்துவமனையில் காலமானார். அங்கு அவர் மார்ச் 29 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் இருந்துள்ளன.
இதையடுத்து அவரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் இன்று சோதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கோவிட்19 தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கோவிட்-19 வைரஸ் தாக்கி உயிரிழந்தவர் தாராவியில் உள்ள ஷாஹு நகரைச் சேர்ந்தவர். இது மக்கள் அடர்த்தியான பகுதியாகும். இது குறித்து மும்பை மாநகராட்சி தரப்பில் கூறுகையில், “அவரது குடும்பத்தின் மற்ற ஏழு உறுப்பினர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் சோதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்ந்த கட்டடம் சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றுள்ளனர்.
இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா: நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு!