ETV Bharat / bharat

மும்பையில் பட்டாசு வெடிக்க தடை : மாநகராட்சி அறிவிப்பு

மும்பை: தீபாவளி பண்டிகை அன்று மும்பையில் பட்டாசு வெடிக்க அம்மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

மும்பையில் பட்டாசு வெடிப்புக்கு தடை
மும்பையில் பட்டாசு வெடிப்புக்கு தடை
author img

By

Published : Nov 9, 2020, 6:28 PM IST

நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, அம்மாநகராட்சி நிர்வாகம் பட்டாசு வெடிக்க தடைவிதித்துள்ளது.

அன்றைய தினம் தனியார் வளாகத்தில், புஸ்வானம், சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகள் மட்டும் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், “கரோனா நோயாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடைவிதித்துள்ளன.

மும்பையில் பட்டாசு வெடிப்புக்கு தடை
மும்பையில் பட்டாசு வெடிப்புக்கு தடை

மகாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்ரே, கரோனா பரவலையும், காற்று மாசுபடுதலையும் கருத்தில்கொண்டு பட்டாசு வெடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

பட்டாசு வெடிப்பதால் வெளிப்படும் புகை நுரையீரலைத் தாக்கும் அபாயம் உள்ளதால், இந்த ஆண்டு பட்டாசு இல்லா தீபாவளியைக் கொண்டாட மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: தி.நகரில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.