மும்பை ஆரே காலனியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு கடந்த 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது அங்கு எந்த ஒரு மரங்களும் வெட்டப்படவில்லை என நீதிபதிகள் முன் தெரிவித்தார்.
பின்னர் மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும்; வாகன நிறுத்துமிடம் அமைக்க எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுவரை வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை நட்டு, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதி, நவம்பர் 15ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: சரியும் மரங்களும் வளரும் கட்டிடங்களும் - மெட்ரோ நகர் மும்பை!