உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லக்னோவில் உள்ள மேடாண்டா மருத்துவமனையில் சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கோவிட்-19, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்படவில்லை என முடிவுகள் வெளிவந்துள்ளன.
முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து மேடாண்டா மருத்துவமனையின் மருத்துவர் ராகேஷ் கபூர் கூறுகையில், “முலாயம் சிங்கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க:முலாயம் சிங் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிவிப்பு