ETV Bharat / bharat

பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது - ராணுவ மருத்துவமனை - ராணுவ மருத்துவமனை

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் இருந்தாலும், அவரது ரத்த ஓட்டம் சீராக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Mukherjee still in deep coma, but haemodynamically stable: Doctors

author img

By

Published : Aug 28, 2020, 2:54 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பிரணாப் முகர்ஜி சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று (ஆக்ஸ்ட் 27) அறிக்கை வெளியிட்டது.

அதில், "பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார். இருந்தபோதிலும், அவருக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது. அதனால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க...கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் கவலைக்கிடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.