ETV Bharat / bharat

காரீப் பருவச் சந்தை 2020: 487.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! - கரீப் பருவச் சந்தை 2020

டெல்லி: நடப்பு காரீப் பருவச் சந்தை மூலம் தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்
author img

By

Published : Jan 2, 2021, 8:58 PM IST

Updated : Jan 2, 2021, 9:23 PM IST

நடப்பு காரீப் பருவச் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பருவப் பயிர்களை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்துவருகிறது.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் ஜார்க்கண்டில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை 487.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆண்டில் இதே காலத்தில் 390.56 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் 24.93 விழுக்காடு அதிகம். இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.77 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு காரீப் பருவச் சந்தைக் காலத்தில் 62.28 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.92,120.85 கோடி பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்களின் வேண்டுகோளின்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், குறைந்தபட்ச ஆதார விலை மூலம் 2020 டிசம்பர் 31ஆம் தேதிவரை ரூ.52.40 கோடி மதிப்புடைய 5, 089 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயை கர்நாடகம், தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டதன்மூலம் 3,961 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.

இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் விவசாயி தற்கொலை

Last Updated : Jan 2, 2021, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.