உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் வசிக்கும் 35 வயதான மாற்றுத்திறனாளி தேவேந்திர வர்மா என்பவர், உடல்நிலை சரியில்லாததால் மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி அவரது வார்டில் உள்ள நோயாளிகள் துர்நாற்றம் வீசுவதாக மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர் அசோக் குப்தா கூறுகையில்; "மாற்றுத்திறனாளியான வர்மா ஜூலை 21 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எப்போது இறந்தார் என்று மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியாது. சிறந்த சுகாதார பராமரிப்புக்காக குவாலியருக்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்தோம், ஆனால் பயனில்லை" என்று கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.