ETV Bharat / bharat

டாஸ்மாக் திறப்பு: கண்டித்த காவலரைத் தாக்கி சிறைவைத்த 'குடி'மகன்கள்! - டாஸ்மாக் திறக்கப்பட்டத்தை கண்டித்த போலீஸ்

போபால்: ஊரடங்கில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதைக் கண்டித்த காவலரை, மதுப்பிரியர்கள் பலமாகத் தாக்கி கடைக்குள் சிறைவைத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

்ே்
ே்ே
author img

By

Published : Apr 21, 2020, 11:31 AM IST

மத்தியப் பிரதேசத்தில் ராஜ்கார் மாவட்டத்தின் ராம்புரியா (Rampuria) கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதாகக் காவலர் ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கிராமத்திற்கு விரைந்த காவலர், கடை திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாகக் கடை திறந்தவரைக் கண்டித்தது மட்டுமின்றி, மதுபானம் வாங்குவதற்கு கடைக்கு முன்பு கும்பலமாக நின்றவர்களிடம் தனிநபர் இடைவெளி குறித்து விளக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த குடிமகன்கள், காவலரை ஆயுதங்களால் தாக்கி கடைக்குள் சிறைவைத்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, குஜ்னர் காவல் நிலையத்திற்கு (Khujner police station) இது குறித்த தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஏற்கனவே கண்டித்த காவலரை, மக்கள் தாக்கிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 2 மணி நேரம் கடையில் காவலர் சிறைவைக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் தப்பிக்க வழியில்லை: சரணடைந்த குற்றவாளிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.