மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில், இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால், கமல்நாத்தின் அரசு ஆட்டம் கண்டுள்ளது. இச்சூழலில், அம்மாநில ஆளுநர் லால்ஜி தாண்டன் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காலை மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கூடியது. அப்போது, பேரவைத் தலைவர் பிரஜாபதி, 'கோவிட் 19 பாதிப்பு காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என அறிவித்தார்.
இதையும் படிங்க : ஈரானில் நான்காவது கட்ட மீட்பு நடவடிக்கை: தாயகம் திரும்பிய 53 பேர்!