கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாட்டிலுள்ள தினக்கூலி தொழிலாளர்களும் ஆதரவற்ற ஏழைகளும் தங்கள் அன்றாட உணவுக்கே தடுமாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கடக்கில் ஆதரவற்ற பெண் ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் உண்ண உணவின்றி பிரதான சாலை ஒன்றில் கடந்த சில நாள்களாக அமர்ந்து அழுதுகொண்டிருப்பது காண்போரை வேதனையின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.
கொப்பல் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ரத்னவ்வா எனும் இந்தப் பெண் ஊரடங்கைத் தொடர்ந்து தன் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருள்கள் தீர்ந்ததால், உதவி ஏதேனும் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வீட்டைவிட்டு குழந்தைகளுடன் வெளியேறியுள்ளார்.
ஆனால் எவ்வளவு முயன்றும் உணவுப் பொருள்கள் ஏதும் கிடைக்காததால் அந்த ஊரின் பிரதான சாலையில் தங்கி, தன் குழந்தைகளுக்கு எவரேனும் உணவளிப்பார்களா என காத்திருக்கிறார்.
அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களின் கவனம் இன்னும் இந்தப் பெண், அவரது குழந்தைகள் மீது படாத நிலையில் அவ்வழியே கடந்து செல்பவர்களில் சிலர் இவர்களின் நிலை கண்டு உணவளித்து உதவுகின்றனர்.
இதையும் படிங்க: 200 பேருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய துணை முதலமைச்சர்!