பசுமை மண்டல வாயு காரணமாகப் புவி வெப்ப மையம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது வடக்கு மற்றும் தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உருகி வருகிறது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பசுமை மண்டல வாயு குறைக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இதை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றால் 2100ஆம் ஆண்டுக்குள் போலார் கரடிகள் இனமே அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.