கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அன்று இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுனில் குமாரும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 18) சுனில் குமாரின் உடல் சிறப்பு ராணுவ விமானம் மூலம் பாட்னா விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுக நின்ற மக்கள், தேசியக் கொடி போர்த்தப்பட்ட சுனில் குமாரின் உடலைப் பார்த்து கோஷங்களை எழுப்பினர்.
இந்திய - சீன மோதலில் தமிழ்நாட்டின், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்த மோடி!