கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளது. நடைதிறக்கப்பட்டு நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அம்மாநில காவல்துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுமார் 2 ஆயிரத்து 400 கழிவறைகள், 250 குடிநீர் டாங்குகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் பி.பி நூஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன், பெண்ணிய ஆர்வளர்கள் தங்களின் பலத்தைக் காட்டும் இடமாக சபரிமலை ஐயப்பன் கோயிலை பார்க்கக் கூடாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு முறையாகப் பின்பற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.
![கேரள அமைச்சர் சுரேந்திரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5077144_kdfs.jpg)
சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக கூட்டணி சேரும் விவேக்!