ETV Bharat / bharat

கரோனா ரத்த மாதிரிகளை ருசித்த குரங்கு: காணொலி வைரல்

லக்னோ: மீரட் நகரின் மருத்துவமனையிலிருந்து கரோனா வைரஸ் (தீநுண்மி) ரத்த மாதிரிகளை குரங்கு தூக்கிச் சென்று சாப்பிட்ட காணொலியால் குடியிருப்புவாசிகளிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Covid-19
Covid-19
author img

By

Published : May 30, 2020, 1:36 PM IST

Updated : May 30, 2020, 4:12 PM IST

கரோனா தீநுண்மி பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் வருகையை (அவர்கள் அளிக்கும் உணவுப்பொருள்களை) நம்பி வாழ்ந்துகொண்டிருந்த வனவிலங்குகளுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குரங்குகளுக்கு மக்கள் உணவு வழங்குவது வழக்கம். ஆனால், தற்போதைய கரோனா சூழலால் உணவின்றி தவித்த குரங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள கரோனா நோயாளிகளுக்கான சிறப்புச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு மருத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது.

அந்தச் சிறப்புப் பிரிவுக்குள் உணவு தேடி நுழைந்த குரங்குகள் கூட்டம், எதைச் சாப்பிடுவது எனத் தெரியாமல் விழித்துள்ளன. அப்போது, அங்கிருந்த ஒருவரின் கையிலிருந்த மூன்று நோயாளிகளின் கரோனா ரத்த மாதிரிகளை தூக்கிச் சென்றுள்ளது.

கரோனா தீநுண்மி மாதிரிகளைச் சாப்பிட்ட குரங்கு

இதைப் பார்த்த மருத்துவ வல்லுநர்களும், சுகாதாரத் துறை ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்து அந்த மாதிரிகளை குரங்கிடமிருந்து பறிக்க முயற்சிசெய்தனர். ஆனால், அதற்குள் மரத்தில் விறுவிறுவென ஏறிய ஒரு குரங்கு மாதிரிகளை ருசித்து சாப்பிட்டுள்ளது.

இதைப் ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட காணொலி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய மீரட் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் எஸ்.கே. கார்க் (S.K. Garg), "இச்சம்பவம் இரண்டு நாள்களுக்கு முன்பு எங்கள் மருத்துவமனையில்தான் நடந்தது. ஆனால், குரங்கு கையிலிருந்தது கரோனா தீநுண்மி சோதனை மாதிரிகள் கிடையாது. அவை கரோனா இருக்குமா என்ற சந்தேக நபர்களின் ரத்த மாதிரிகள்தான்.

கரோனா தீநுண்மி மாதிரிகள் பாதுகாப்பாக குளிர்பதன பெட்டிகளில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்படுகின்றன. இச்சம்பவத்தினால் எந்த வகையிலும் ஆபத்து இல்லை. நோயாளிகளின் மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக மாதிரிகளைத் தீவிர பாதுகாப்போடு எடுத்துச் செல்லுமாறு மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இருப்பினும் குரங்கு மூலமாக கரோனா தீநுண்மி பரவிவிடுமா என்ற அச்சத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் உள்ளனர்.

இதையும் படிங்க: எல்லையில் புதிதாக வெட்டுக்கிளி கூட்டம் வரவில்லை - மத்திய அமைச்சர்

Last Updated : May 30, 2020, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.