17ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே அவரின் வெளிநாட்டு பயணம் குறித்த திட்டத்தின் விவரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதன்படி வரும் ஜூன் 13ஆம் தேதி கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், ஜூன் 22 ஆம் தேதி ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஃபிரான்ஸ், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்காவிற்கும் என அடுத்த ஆறு மாதங்களிலும் தொடர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளில் மட்டும் 44 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதற்கான செலவு மட்டும் ரூ.2,021 கோடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.