நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்தநாளை பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட அவரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வருகைதந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் குஜராத் ஆளுநர், அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபனி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பு வரவேற்பளித்தனர்.
இன்று மோடி தனது தாயாரான ஹீராபென்னை சந்தித்து அவரிடம் ஆசிபெற்றார். இதன்பின், மோடி சர்தார் சரோவர் அணையையும் பார்வையிட்டார்.