உத்தரப் பிரதேசத்தில் அலிகார் நகரில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கடந்த 1875ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சர் சையத் அகமது கான் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இதன் நூற்றாண்டு விழா இன்று (டிச.22) நடைபெறவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக, பல்கலை நிர்வாகம் காணொலிக் காட்சி மூலம் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின்போது, தபால் தலையையும் பிரதமர் வெளியிடுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்குடன், பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்குப் பிறகு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் மூன்றாவது பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.