ETV Bharat / bharat

தேசிய குடியுரிமை மசோதா: பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு

டெல்லி: தேசிய குடியுரிமை மசோதா விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்குதல் தொடுத்துள்ளது.

Modi-Shah are 'migrants' in Delhi: Congress' Adhir Ranjan Chowdhury

author img

By

Published : Dec 1, 2019, 10:57 PM IST

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை குடியேறிகள் என்று விமர்சித்துள்ளார். தேசிய குடியுரிமை மசோதா தொடர்பாக பேசிய அவர், இந்த நாட்டில் அனைவரும் சமம். இந்துக்களும், இஸ்லாமியர்களும் சமமானவர்கள். ஆனால் இந்துக்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இது இஸ்லாமியர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். தேசிய குடியுரிமை மசோதாவை நாடு முழுக்க அமல்படுத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மறைமுக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேட்டி

முன்னதாக இதுதொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய குடியுரிமை மசோதா உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த மதமும் குறி வைக்கப்படவில்லை என்று தெளிவுப்புடுத்தியிருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த மசோதா: முதலமைச்சர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.