ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய பாஜக தேசியச் செயலர் சுனித் தியோதர், நரேந்திர மோடி அரசின் 2ஆம் பாகம் குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், 'நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களின் தசாப்தங்கள் கால கனவுகளை நிறைவேற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் என தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
கரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையிலும், நரேந்திர மோடி சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் நாட்டின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை செயல்படுத்துகிறார்.
இதற்காக உலகம் அவரை சிறந்த தலைவராக காண்கிறது' என்றார். இரண்டாவது முறையாக மத்தியில் பொறுப்பேற்ற பாஜக அரசு, தங்களது சித்தாந்த கருத்தியல் நிகழ்வுகளை அதிதீவிரமாக நிறைவேற்றியது.
ஆனால், கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதாரப் பேரழிவு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'புகையிலையை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்' - ஹர்ஷ் வர்தன்