ETV Bharat / bharat

மோடியை ஈர்த்த புதிய கண்டுபிடிப்பு!

author img

By

Published : Sep 30, 2019, 11:47 AM IST

சென்னை: கவனம் செலுத்தாதவர்களை கேமரா மூலம் அடையாளம் காணும் புதிய கண்டுபிடிப்பு தன்னை ஈர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Modi

சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை சென்றார். ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பெரும் திரளான மாணவர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, "கடந்த 36 மணி நேரமாக பல பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். சோர்வை உங்களிடம் காணவில்லை. ஒரு பணியை முடித்த முழு திருப்தியை காண்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சி இளைஞர்களுக்கு உதவும். இதனால் புதிய தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு அறிமுகமாகிறது.

நிகழ்ச்சியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் நாளை தொழில் தொடங்குபவர்களுக்கு உதவும் என நம்புகிறேன். சவால்களை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண துடிக்கும் உங்களின் மனநிலை சவாலில் வெற்றிபெறுவதை விடச் சிறந்தது.

முக்கியமாக, கவனம் செலுத்தாதவர்களை கேமரா மூலம் அடையாளம் காணும் புதிய கண்டுபிடிப்பு என்னை ஈர்த்துள்ளது. இது குறித்து, சபாநாயகரிடம் பேசவுள்ளேன். நாடாளுமன்றத்திற்கு இது உதவும் என நம்புகிறேன்" என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 30.09.19

இரண்டாவது முறையாக பிரதமரான பின்னர் முதல் முறையாக தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை..

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கிண்டி ஐஐடி வளாகத்திற்கு வருகிறார். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கான கண்காட்சியையும் பார்வையிடுகிறார். பின்னர் 11.40 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து நண்பகல் 12.45 மணிக்கு டெல்லி புறப்பட உள்ளார்..

சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் தனது உரையில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து ஐஐடியின் இன்னாள், முன்னாள் மாணவர்கள் நமோ செயலியில் தெரிவிக்குமாறு டுவிட்டரில் பிரதமர் ஏற்கனவே கேட்டு கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக பிரதமராக வெற்றி பெற்ற பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையையொட்டி 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஐஐடி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது...

tn_che_01_pm_modi_arrival_of_convocation_function_of_iit_chennai_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.