நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலை குறித்து மோடி அரசை விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "தற்போது நிலவும் மந்தநிலையை மோடி அரசு ஏற்கவில்லை. உண்மையான ஆபத்து என்னவென்றால், பிரச்னைகளை நாம் அங்கீகரிக்கப்படாவிட்டால், அதற்கான பதில்களைக் கண்டுபிடிப்பதும், சரியான நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை" என்றும் கூறினார்.
மான்டெக் சிங் அலுவாலியாவின் "பேக்ஸ்டேஜ்" புத்தக அறிமுக கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், "முன்னாள் திட்ட கமிஷன் ஆணையத்தின் துணைத் தலைவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசின் நல்ல மற்றும் மோசமான விஷயங்கள் குறித்து எழுதியுள்ள புத்தகம்தான் இது.
இந்த விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், தற்போதுள்ள அரசு மந்தநிலை நிலவுகிறது என்பதை ஒத்துக்கொள்ளக் கூட மறுக்கிறது. இது நம் நாட்டுக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.
நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடையாளம் காணவில்லை என்றால், அதற்கான பதில்களையும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் உண்மையான ஆபத்து" என்றார்.
மேலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்தப் புத்தகம் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வன்முறைக்குக் காரணம் சமூக வலைதளங்கள்தான் - ஜம்மு காவல் துறை