மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் வேளையில் தேர்தல் வியூகங்களில் தனக்கேன தனி பாணியை கடைப்பிடித்து வரும் பாஜக இம்முறை பிரதமர் மோடியின் பெயரை சௌகிதார்(காவலர்) நரேந்திர மோடி என ட்விட்டரில் மாற்றி இருப்பது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் தன் பெயருடன் சௌகிதார்(காவலர்) எனச் சேர்த்துள்ளனர். முன்னதாக காங்கிரஸ் தேசியத்தலைவர் ராகுல் காந்தி மோடியை சோர்(திருடன்) என விமர்சித்த நிலையில் மோடி தன்னை சௌகிதார்(காவலர்) என பொதுக் கூட்டத்தில் சொன்னது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மோடி மார்ச் 31ஆம் தேதி "மேயின் கி சௌகிதார்" என பெயரிட்டு பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். கடந்த முறை "சாய் பே சார்ச்சா" என தான் தேனீர் விற்பனை செய்ததை மையப்படுத்தி பரப்புரை மேற்கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது.