இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பூடானுக்குச் சென்றிருந்தார். இரண்டாவது முறையாக அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்னர், பூடான் நாட்டுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
பிம்ஸ்டெக் நாடுகளில் ஒன்றான பூடான் நாட்டுக்கு பிரதமர் சென்றிருந்ததால் முக்கியமான கோப்புகள் கையெழுத்தாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய மோடி, மறைந்த மூன்றாம் ட்ரூக் கயல்போவுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்ட மோடி, பரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தார்.
மேலும், மோடியின் இந்த பயணம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி பூட்டான்' என்று பதிவிட்டுள்ளார்.