ETV Bharat / bharat

எதிர்க்கட்சியினர் அவமானப்படுத்துகின்றனர்: மோடி - பாஜக

டெல்லி: இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவமானப்படுத்துகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

modi
author img

By

Published : Mar 22, 2019, 4:32 PM IST

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏன் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

அந்தவகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிட்ரோடா, ”பால்கோட் தாக்குதல் குறித்து நான் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாம் எதன் மீது தாக்குதல் நடத்தினோம். நாம் உண்மையிலேயே 300 தீவிரவாதிகளைக் கொன்றோமா? அந்த சம்பவம் குறித்து இன்னும் நிறைய தரவுகளும் தகவல்களும் அளிக்கப்பட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவரின் ஆலோசகர் பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்திய ராணுவப்படைகளை அவமானப்படுத்தி அவர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் நமது ராணுவப் படையை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தி வருகின்றன. நான் சக இந்திய குடிமக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், எதிர்கட்சித் தலைவர்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். 130 கோடி இந்தியர்கள், எதிர்கட்சிகளின் இந்த தரம்தாழ்ந்த கருத்துகளை மன்னிக்கமாட்டார்கள்” என பதிவிட்டு வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.