சிக்கிய பயங்கரவாதக் குழு தளபதி: காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம் - அவந்திபோரா பகுதியில் என்கவுண்டர்
அவந்திபோரா பகுதியில் என்கவுண்டர் நடந்து வரும் நிலையில், பயங்கரவாதிகள் தளபதி ஒருவர் சிக்கியுள்ளதால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளன.
புல்வாமா மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்ட தளபதி ரியாஸ் நாய்கூவும் மற்றுமொரு போராளியும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைப்பேசி இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பெய்க்போரா பகுதியில் போராளிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று இரவு முதல் பெய்க்போரா பகுதியில், கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரிகள் அதனைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது!