ETV Bharat / bharat

புதுச்சேரியில் நடமாடும் ஏடிஎம் சேவை; தொடங்கி வைத்த முதலமைச்சர் நாராயணசாமி - corona update news

புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவு காரணமாக பாரதியார் கிராம வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் ஏடிஎம் சேவையை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் நடமாடும் ஏடிஎம் சேவை
புதுச்சேரியில் நடமாடும் ஏடிஎம் சேவை
author img

By

Published : Apr 28, 2020, 8:26 PM IST

உலகையே உலுக்கும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் முதன் முறையாக பாரதியார் கிராம வங்கி மூலம் நடமாடும் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நிகழ்ச்சி புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதனை முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரியில் நடமாடும் ஏடிஎம் சேவை

அதில் பாரதியார் கிராம வங்கித் தலைவர் மார்க்ரெட் லெடிசியா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வீரராகவன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் உமா குருமூர்த்தி, பாரதியார் கிராம வங்கி பொது மேலாளர் மோகன் குமார், பாரதியார் கிராம வங்கி பிரதான கிளை மேலாளர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், பாரதியார் கிராம வங்கி புதுச்சேரியில் 43 கிளைகளுடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.