மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹிராலால் பந்சந்தா. மயிலை கொன்றதாகக் கூறி கும்பல் ஒன்று நீமூச் கிராமத்தில் வைத்து ஹிராலாலை சராமாரியாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த ஹிராலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஹிராலால் மரணம் அடைந்தார்.
இதில் தொடர்புடைய 10 பேரில் 9 பேர் வன்கொடுமை தடுப்புத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். உயரிழந்தவர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் வனத் துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வனச் சட்டம் 1972இன் கீழ் இந்திய தேசிய பறவையான மயிலை கொன்றால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இது குறித்து காவல்து றையினர் விசாரணை செய்துவருகின்றனர்.