ETV Bharat / bharat

விடுதிக்குள் நுழைந்து இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்

கர்நாடகா: பெல்காம் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கர் விடுதிக்குள் இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டைகளுடன் புகுந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த இருசக்கர வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

பெல்காம் விடுதி தாக்குதல்  Belgaum hostel attack tamil  belgaum ambedkar hostel fight  damaged the two Wheeler  mob enter into dr ambedkar hostel and damaged the two Wheeler in karnataka
விடுதிக்குள் நுழைந்து இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் கும்பல்
author img

By

Published : Feb 24, 2020, 1:59 PM IST

கர்நாடக மாநிலம் பெல்காமிலுள்ள ஆண்கள் விடுதியில் 20க்கும் மேற்பட்டோர், இரும்பு கம்பி மற்றும் கிரிக்கெட் மட்டைகளுடன் நுழைந்து அங்கிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நெறுக்கியுள்ளனர். மேலும், விடுதியின் ஜன்னல்களில் அந்த கும்பல் கற்களை எரிந்து சேதப்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் நடந்த இந்தச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றிய காவலர்கள், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதிக்குள் நுழைந்து இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் கும்பல்

இச்சம்பவம் குறித்து பெல்காம் காவலர்கள் பேசுகையில், டாக்டர். அம்பேத்கர் விடுதியில் நுழைந்த நபர்கள் அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர் என்றும் இச்சம்பவத்தின்போது மாணவர்கள் மீது எவ்வித தாக்குதலும் நடைபெறவில்லையென்றும் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து பேசிய காவலர்கள், அம்பேத்கர் விடுதியில் தங்கியிருக்கும் இருவர் சேர்ந்து ஒரு பெண்ணை ராகிங் செய்ததாகவும், அதனால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து இச்செயலை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆந்திராவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் 'திஷா' சட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.