மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று காலை 10.30 மணியளவில் அந்தமானுக்கு பயணம் மேற்கொண்டார்.
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அந்தமானில் மக்களவைத் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்.
இன்று பிற்பகல் அந்தமானில் பரப்புரையில் ஈடுபடும் கமலஹாசன் இரவு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நாளை பிற்பகல் கோயம்புத்தூரில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த படியே பரப்புரை மேற்கொள்வார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.