வெங்காய விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விலை குறைய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. நாட்டின் பல நகரங்களில் வெங்காய விலை கிலோ ரூ.100ஐ கடந்துவிட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் கூட வெங்காயம் கிலோ ரூ.75க்கு விற்பனையாகிறது.
கோவா தலைநகர் பனாஜியில் ரூ.160, அந்தமானின் மாயபந்தர் பகுதியில் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெங்காய விலை சதத்தை தாண்டிவிட்டது. கொல்கத்தாவில் ரூ.140 ஆகவும் ஒடிசாவின் கட்டாக்கில் ரூ.120 ஆகவும் ஹரியானாவில் ரூ.120 ஆகவும் மீரட்டில் ரூ.120 ஆகவும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க : வெங்காயம் தட்டுப்பாடு ஏன்?
வெங்காய விலையேற்றம் நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் விஷம்போல் ஏறி உள்ளது. இந்த நிலையில் மாநில அரசு நிறுவனமான எம்.எம்.டி.சி. மூலம் ஒரு லட்சம் டன் வரை வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்த வெங்காயங்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்காயம் விலை ஏற்றத்தை தடுக்கும்விதமாக டிச. 5ஆம் தேதி வியாழக்கிழமை உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: கிலோ ரூ.25: தடுப்புகளைத் தாண்டி வெங்காயம் வாங்கிய பெண்கள்.!