கர்நாடக மாநிலம் கே.ஆர் நகரா தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரா. மகேஷ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
விலங்குகள் மீது தீவிர ஆர்வம் கொண்டுள்ள மகேஷ் தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் குரங்குகளை வளர்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதம் செய்துவந்த குரங்குகளைத் தனது தோட்டத்தில் சிறப்புக் கவனம் கொடுத்து மூன்றாண்டுகளாக வளர்த்து வருகிறார் மகேஷ்.
இந்நிலையில், அவரது செல்லக்குரங்கான சிண்டு விளைநிலத்தில் உள்ள மின்கம்பத்தில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சிங்கப்பூர் சென்றிருந்த மகேஷுக்கு இந்தச் சோகச் செய்தி தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் தனது பயணத்தைப் பாதியிலேயே ரத்துசெய்துவிட்டு வீடு திரும்பிய மகேஷ் மனிதர்களுக்கு அளிக்கப்படும் இறுதி மரியாதைகளுடன் சிண்டு குரங்கை நல்லடக்கம் செய்தார். எம்.எல்.ஏ மகேஷ் மேற்கொண்ட மனித நேயமிக்க செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: ஜீ சினி விருதுகள் 2020 - விருதுகளை வென்ற பிரபலங்கள்