ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு அம்மாவட்ட காவல் பொது ஆய்வாளர் விஜய் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பெமினி பகுதியில் மாயமான பி.எச்டி. ஆராய்ச்சி மாணவர் ஹிலால் (27) அஹமது குறித்து கேட்டபோது, “அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக” அவர் பதிலளித்தார்.
தாய்-தந்தையரை இழந்த ஹிலால் அஹமது, கடந்த 14ஆம் தேதி மாயமானார். இது குறித்து அவரது சகோதார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் ஹிலால் அஹமதுவை தேடிவந்தனர். இந்நிலையில் அவர் பயங்கரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஹிலால் குடும்பத்தினர் கூறுகையில், “ஹிலாலை பிரிந்த எங்கள் குடும்பம் பெரும் துயரத்தில் உள்ளது. அவருக்கும் பயங்கரவாத அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது, ஒருவேளை பாதுகாப்பு துறை அல்லது காவல்துறையோ அவரை காவலில் வைத்திருந்தால் விடுதலை செய்ய வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: கரோனாவை குணப்படுத்துகிறதா பதஞ்சலியின் மருந்து ?