ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை இருவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்புணவர்வு செய்துள்ளனர். அங்கிருந்து தப்பித்த அந்தச் சிறுமி வீடு வந்து இது குறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
அதையடுத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் மற்றொருவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இது குறித்து காவல் துறை சார்பில் இந்திய தண்டனைச் சட்டம், போக்சோவில் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு!