மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்லலாம் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முற்பட்டார்கள்.
ஆனால், சிலர் அதனை தடுத்து நிறுத்தியதால் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின. இது குறித்து மத்திய அமைச்சர் முரளிதரன், "அர்பன் நக்சலாக இருக்கும் பெண்கள்தான் சபரிமலை கோயிலுக்கு செல்கிறார்கள்.
நாத்திகவாதி, கலகக்காரர்களான அவர்கள் தான் கோயிலில் இடையூறு ஏற்படுத்திகிறார்கள். அவர்கள் பக்தர்கள் அல்ல என நான் நினைக்கிறேன். கோயிலுக்கு சென்றதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளவே அவர்கள் இதனை செய்கிறார்கள். அவர்கள் பக்தர்களா இல்லையா என்பதை ஆராய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பால் தாக்கரே நினைவிடத்தில் சிவசேனா, பா.ஜனதா தலைவர்கள் மரியாதை!