புதுச்சேரியில் நாள்தோறும் அரசின் சார்பு நிறுவனமான பாண்லே மூலம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் சப்ளை உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. இதில், சுமார் 45 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்டது. மீதி வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல்செய்யப்பட்டது. ஆனால், சமீபகாலமாக வெளிமாநிலங்களிலிருந்து போதுமான அளவுக்கு பால் கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க தமிழ்நாட்டிலிருந்து கூடுதலாகப் பால் வாங்க புதுச்சேரி அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான நடவடிக்கையாக தலைமைச் செயலகம் வளாகத்தில் சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் சார்பில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பால் தட்டுப்பாட்டை போக்குவதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. வெளிமாநிலத்திலிருந்து பால் கொள்முதல்செய்வது தொடர்பாகச் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: 'திமுகவின் கொ.ப.செ. நயன்தாரா... கி. வீரமணி இருக்கும்வரை திமுக உருப்படாது!' - ராதாரவி தாக்கு