அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏன்னென்றால் அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு அளித்து வந்த வரிவிலக்கிற்கான Generalised System Preference என்ற அந்தஸ்தை ரத்து செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் 28 அமெரிக்க பொருட்களுக்கு விதித்து வந்த சுங்க வரியை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்தது.
இந்நிலையில் இந்த சந்திப்பில் பயங்கரவாத தடுப்பு, எச்1. பி விசா, இருதரப்பு ஏற்றுமதி வரி விதிப்பு தொடர்பான பிரச்னைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் மைக் பாம்பியோ சந்தித்துப் பேசினார்.