ஹரியானா மாநிலம் 22 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலமாக அறிவித்தது. அந்த மண்டல பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதியளித்தது. ஆனாலும்கூட, மாநிலத்திற்குள் வருபவர்களுக்கு அரசின் அனுமதி அவசியமாகக் கருதப்படுகிறது.
இதனால் டெல்லி, என்.சி.ஆர். பகுதிகளிலிருந்து ஹரியானாவின் குருகிராம் பகுதிக்கு வேலைநிமித்தமாக நுழைந்த குடிபெயர் தொழிலாளர்களைத் தடுத்து திரும்பிச் செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், தொழிலாளர்களுக்கும்-காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலத்திற்குள் அனுமதிக்காத ஆத்திரத்திலும், திரும்பிச் செல்ல வேண்டிய விரக்தியிலும் தொழிலாளர்கள் காவல் துறையினர் மீது கல்லெறிந்தனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றது.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடி: உபரில் 3 ஆயிரம் பேர் பணிநீக்கம்