ETV Bharat / bharat

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம்: சிவராஜ் சிங் சவுகான் vs கமல்நாத் - சிவராஜ் சிங் சவுகான் vs கமல்நாத்

போபால்: வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பொய்யான கருத்துகளை மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பரப்புகிறார் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான்
சிவராஜ் சிங் சவுகான்
author img

By

Published : May 21, 2020, 1:39 PM IST

உத்தரப் பிரதேசத்திலுள்ள பல்வேறு ஊர்களில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரப் பிரதேச அரசுக்கு ஆயிரம் பேருந்துகளை வழங்க காங்கிரஸ் தயாராகவுள்ளதாக மே 16ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்தார்.

பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட உத்தரப் பிரதேச அரசு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகள், நடத்துநர்களின் தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து பேருந்துகளின் தகவல்களை காங்கிரஸ் உத்தரப் பிரதேச அரசுக்கு அளித்தது. காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளதாகச் சமர்ப்பித்துள்ள பேருந்து எண்களைச் சரிபார்க்கும்போது அவற்றில் சுமார் 100-க்கும் மேற்பட்டவை இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் என்றும் சுமார் 295-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குச் சரியான உரிமம் இல்லை என்றும் உத்தரப் பிரதேச அரசு குற்றஞ்சாட்டியது.

அரசுக்குத் தவறான தகவல்களை அளித்ததாக, உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உ.பி. அரசு வழக்குப்பதிவு செய்தது. இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "இதுபோன்ற நிகழ்வுகளில் சில தவறுகள் நடப்பது இயல்பு. காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 1059 பேருந்துகளில் 879 பேருந்துகளின் எண்கள் சரியானவை. விரைவில் மற்ற பேருந்துகளின் எண்களையும் ஒப்படைத்துவிடுவோம்" என்றார். இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், தொழிலாளர்கள் விவகாரத்தில் மோசமான அரசியல் செய்ய வேண்டாம் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

  • प्रियंका जी, अगर आपको सच में श्रमिकों की मदद करनी है, तो मध्यप्रदेश आइये। हमारे यहॉं की व्यवस्थाऍं देखिये, सीखिए; उससे आपको मदद मिलेगी। मध्यप्रदेश की धरती पर आपको कोई मजदूर भूखा, प्यासा और पैदल चलता हुआ नहीं मिलेगा। हमने कारगर इंतजाम किये हैं। pic.twitter.com/4MDrl4UDlv

    — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணினால், மத்தியப் பிரதேசத்திற்கு வந்து பாருங்கள். நாங்கள் எம்மாதிரியான ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்பதை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும். பசி பட்டினியில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மத்தியப் பிரதேசத்தில் காண முடியாது. நாங்கள் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

கரோனா போன்ற பேரிடர் காலத்தில் தொழிலாளர்களை வைத்து மோசமான அரசியலில் ஈடுபட வேண்டாம்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கமல்நாத், கொத்து கொத்தான பொய் கருத்துகளை சவுகான் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சவுகான் பொய் பேசுகிறார். ஆனால், தொழிலாளர்கள் விவகாரத்தில் விளையாட வேண்டாம். மத்தியப் பிரதேசத்தில் மேற்கொண்ட ஏற்பாடுகள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். அது ஒரு பெரிய பொய். தொழிலாளர்கள் விவகாரத்தில் விளையாடுவதில் அவமானம் கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் களநிலவரம் குறித்த பொய்யான கருத்துகளை சவுகான் பரப்புகிறார்" என்றார்.

இதையும் படிங்க: தொழிலாளர் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை அறிவித்த மத்திய தொழிற்சங்கங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.