உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்சிங். மாற்றுத்திறனாளியான இவர், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் வாசனை திரவியங்களை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால், ராஜமுந்திரியில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ராம்சிங் தள்ளப்பட்டார். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதால், தனது மூன்று சக்கர மிதிவண்டியில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டார்.
அதன்படி, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ராஜமுந்திரியில் பயணத்தை தொடங்கிய ராம்சிங் , இன்று விசாகப்பட்டினம் வந்தடைந்தார்.
இதையும் படிங்க:'மே 28ஆம் தேதிக்குப் பிறகு தான் வெப்பம் குறைய வாய்ப்பு' - இந்திய வானிலை ஆய்வுமையம்