கோட்டாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் தொடர்பாக ராஜஸ்தான் அரசு, உத்தரப் பிரதேச அரசுக்கு 36 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பியது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா கூறுகையில், “கரோனா தொற்று நெருக்கடியின்போது காங்கிரஸ் கட்சி, அரசியல் விளையாடுகிறது. காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. ஒருபுறம், சிக்கித் தவிக்கும் மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கான மசோதாவை அனுப்புகிறார்கள். மற்றொரு புறம், அவர்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல பேருந்துகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச அரசு ஏற்கனவே 27 ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, குடிபெயர்ந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. குடிபெயர்ந்த தொழிலாளர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.
மேலும், இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கட்டாரியா கூறுகையில், "கோட்டாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை பேருந்துகள் மூலம் அனுப்பியது தொடர்பான மசோதாவை அனுப்பியதன் மூலம், காங்கிரஸின் இரட்டை நிலைபாட்டை காட்டியுள்ளது. இது அரசியல் வித்தைகள்" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அரசுக்கு கொடுக்கவேண்டிய ரூ.17 லட்சத்தை ஏமாற்றிய உ.பி.,