ETV Bharat / bharat

இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க யுக்டி 2.0 அறிமுகம்!

author img

By

Published : Jun 24, 2020, 5:06 AM IST

டெல்லி: இளைஞர்களின் புதுமையான படைபாற்றல்களை வெளியுலகிற்கு காட்சிப்படுத்துவதற்கான தளமாக யுக்டி 2.0ஐ மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

portal
portal

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்த யுக்டி 2.0ஐ (Yukti 2.0), என்ற இணையதளத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உருவாக்கினர். முதலில் இந்த தளத்திற்கு மாசிவ் இந்தியன் நாவல்டி டெபாசிட்டரி [Massive Indian Novelty Depository (MIND)] என பெயரிட்டுள்ளனர். ஆனால், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இந்திய பெயரை வைக்க பரிந்துரைத்ததன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடியோ மாநாட்டில் இந்த யுக்டி 2.0ஐ (Yukti 2.0), என்ற இணையதளத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிமுகம் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், " யுக்டி 2.0 என்பது யுக்டியின் முந்தைய பதிப்பை விட சிறப்பு வாய்ந்ததாகும். நமது இளைஞர்களின் புதுமையான படைபாற்றல்களையும் கருத்துக்களையும் வெளியுலகிற்கு காட்சிப்படுத்தவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி கல்வி நிறுவனங்களில் புதுமையை வளர்க்க உதவிகரமாக இருக்கும்.

நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் இருக்கும் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பிற நபர்களால் இந்த போர்ட்டலை அணுக முடியும். கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் யுக்டி 2.0 இல் தங்களின் கண்டுபிடிப்புகளையும் யோசனைகளையும் முன்வைத்து வணிகமயமாக்கலுக்காக பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

இந்த அறிமுகத்தின் போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, AICTE தலைவர் அனில் சஹாஸ்ராபுதே, ஏ.ஐ.சி.டி.இ மருத்துவர் ராஜீவ் குமார் , எம்.எச்.ஆர்.டி யின் கண்டுபிடிப்புக் கலத்தின் தலைமை அலுவலர் மருத்துவர் அபய் ஜெரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு உருவாக்கிய யுக்டி தளத்தில், கரோனா வைரஸ் தடுப்புக்கான யோசனைகள் குறித்து கேட்டறிந்தனர்.

MHRD Launch YUKTI-2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.