ETV Bharat / bharat

ஏப்ரல் 20க்கு பின் எவ்வாறு இயங்க வேண்டும்? உள்துறை அமைச்சகம் அறிக்கை - கரோனா பாதிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை

டெல்லி: ஏப்ரல் 20க்கு பின் பாதிப்பு குறைவான பகுதிகள் எவ்வாறு இயங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

MHA
MHA
author img

By

Published : Apr 15, 2020, 10:42 AM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்பாக நாட்டு மக்களிடம் நேற்று (ஏப்ரல் 14) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக அறிவித்தார். அதேவேளை கரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் முன்னேற்பாடுகளுடன் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழிகாட்டுதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ.

மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • மருத்தவ சேவைகள் வழக்கம் போல் தொடர்ச்சியாக இயங்கும்
  • பொது வெளியில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்
  • விவசாயம் சார்ந்த அனைத்து செயல்களுக்கு அனுமதி
  • கிராம புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் செயல்படலாம்
  • அரசு மேற்கொள்ளும் கட்டுமான தொழில்கள் செயல்பட அனுமதி
  • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் இயங்க அனுமதி
  • மீன்பிடி தொழில் இயங்க அனுமதி
  • இ-காமர்ஸ் எனப்படும் இணைய வழி வர்த்தகம், கொரியர் ஆகியவை செயல்பட அனுமதி
  • சரக்கு போக்குவரத்து செயல்பட அனுமதி
  • ஐடி நிறுவனங்கள் 50 விழுக்காடு வேலையாட்களுடன் செயல்பட அனுமதி
  • பேருந்து, ரயில், விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் இயங்காது
  • கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், மால்கள் ஆகியவை செயல்படாது
  • கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுரை
  • மதுபானக் கடைகள் செயல்பட தடை

மேற்கண்ட அனைத்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை, முகக் கவசம், சமூக இடைவேளி ஆகியவற்றை உறுதிபடுத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.