ETV Bharat / bharat

'ஆலையில் இருந்து விஷ வாயு வெளியானால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?' - தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியானால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

தொழிற்சாலைகளில் இருந்து விஷ வாயு வெளியானால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக சில வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

mha-issues-advisory-on-gas-leak
mha-issues-advisory-on-gas-leak
author img

By

Published : May 8, 2020, 6:19 PM IST

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் நேற்று அதிகாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஸ்டைரின் என்னும் விஷ வாயு கசிந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விஷ வாயுவை சுவாசித்த பொதுமக்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோல் மீண்டும் விஷ வாயு வெளியானால், என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக மக்களுக்கு சில வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில்,

  • ஸ்டைரின் என்பது நிறமற்ற, எளிதில் பற்றக்கூடிய திரவமாகும். இது ப்ளாஸ்டிக், ரப்பர், ஃபைபர் கண்ணாடிகள் ஆகியவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஆட்டோமொபைல், பைப்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளின் அடிப்படையில் பார்த்தால், ஸ்டைரினை சுவாசிப்பதாலும், தொடுவதாலும், உட்கொள்ளுவதாலும் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
  • ஸ்டைரினால் பாதிக்கப்பட்டால் கண், மூக்கு, தோள் ஆகியவற்றில் எரிச்சல், சுவாசப் பிரச்னை, நரம்பு மண்டலம், கிட்னி பிரச்னை, தலைவலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்.
  • அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஸ்டைரினால் மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
  • யாராவது ஸ்டைரினை அறியாமல் சுவாசித்தால், அதிகளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். உடலினைக் குறைந்தது 15 நிமிடங்கள் வரை, தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • காற்றில் ஸ்டைரின் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சிறப்புச் சாதனங்கள் உள்ளது. காஸ் க்ரோமோடோகிராஃபி-யின் மூலம் தரமான காற்றைக் கண்டறிய முடியும்.
  • மண்ணில் அல்லது தண்ணீரில் ஸ்டைரின் வெளியானால் வேகமாக ஆவியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஸ்டைரின் காற்றில் வெளியானால் ஹைட்ராக்ஸி ரேடிக்கல் மூலம் ஒருநாள் வரையில் நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
  • இதுபோன்ற ரசாயன தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க வேண்டும். முக்கியமாகப் பேரிடர் மீட்பு தொடர்பான அனைத்து கூட்டங்களிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் விபத்து ஏதும் ஏற்பட்டால், உடனடியாகத் திட்டமிட முடியும்.
  • அதேபோல் விஷ வாயு வெளியானால் தொழிலாளர்கள் அவர்களின் குடும்பங்களுக்கும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய வேண்டும் எனக் கூற வேண்டும்.
  • இதுபோன்ற அவசர காலங்களில், போதுமான அளவிற்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
  • விஷ வாயு வெளியானதாக அறிவிக்கப்பட்டால், மக்கள் காற்று வீசுவதற்கு இடது புறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திட்டமிடப்பட்ட வழியில் வேகமாக பயணிக்க வேண்டும். அப்போது முகக்கவசம் அணிவது அவசியம். அந்த நேரத்தில் உணவோ, தண்ணீரோ அருந்த வேண்டாம். உடனடியாக உடைகளை மாற்ற வேண்டும். கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • மேலும் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் மக்கள் தகவல் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட முக்கிய விஷ வாயு விபத்துகள்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.