முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அவர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளார் என செய்திகள் வலம்வருகின்றன.
இதற்கு மறுப்பு தெரிவித்த கங்குலி, "அமித் ஷாவை முதன் முதலில் சந்தித்தேன். பிசிசிஐ தலைவர் தேர்தல் குறித்த உரையாடல் அங்கு நிகழவில்லை. அரசியல் குறித்து பேசவில்லை. இதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியபோது பலவிதமான வதந்திகள் பரப்பபட்டது" என்றார். மேலும், 2021ஆம் நடக்கவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக கங்கலி களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.